'தளபதி 68' படத்தில் இணைகிறாரா முன்னாள் மிஸ் இந்திய அழகி? மாஸ் தகவல்..!

  • IndiaGlitz, [Sunday,October 01 2023]

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் ’தளபதி 68’. இந்த படத்தின் பூஜை நாளை நடைபெற இருப்பதாகவும் நாளை மறுநாள் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் தந்தை, மகன் என இரட்டை வேடங்களில் விஜய் நடிக்க இருப்பதாகவும், விஜய் ஜோடியாக த்ரிஷா மற்றும் பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் பிரபுதேவா, அரவிந்த்சாமி உள்ளிட்ட ஒரு சிலர் அடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி கடந்த 2018 ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் டைட்டில் வென்ற நடிகை மீனாட்சி சவுத்ரி இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் ஏற்கனவே ஒரு சில ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும், விஜய் ஆண்டனி நடித்த ’கொலை’ என்ற படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ’தளபதி 68’ திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி இணையும் தகவல் விரைவில் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கமல்ஹாசன் மகளின் ஹாலிவுட் படம்.. ரிலீசுக்கு முன்பே விருதுகளை குவிக்கின்றதா?

உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்கும் ஹாலிவுட் திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே விருதுகளை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரம் 6 தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ்.. சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

ஒவ்வொரு வாரமும் மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் ஆறு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன என்பதும் ஆறு

'லால் சலாம்' ரிலீஸ் தேதியை அறிவித்த லைக்கா.. 2 பிரபலங்களின் படங்களுக்கு சிக்கலா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடித்து முடித்துள்ள 'லால் சலாம்' என்ற படத்தின் ரிலீஸ் தேதியை லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில்

மலையாளத்தில் பிரம்மாண்டமாக களமிறங்கும் சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனம்

இந்தியாவின் முன்னணி பிரம்மாண்டமான படத் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ்  பட தயாரிப்பில் ஈடுபட தொடங்கி வெற்றிகரமான பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் போது

நான் நெருங்குனா யுத்த பூமி, ரத்த பூமியாகிவிடும்: சிவராஜ்குமாரின் 'கோஸ்ட்' டிரைலர்..!

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடிப்பில் உருவான 'கோஸ்ட்' என்ற திரைப்படம்,  விஜய் நடித்த 'லியோ' வெளியாகும் அக்டோபர் 19ஆம் தேதி தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.