பிக்பாஸ் நிகழ்ச்சியில் 'மிஸ் சூப்பர் குளோப்' நடிகையா?

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாள் நெருங்க நெருங்க இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த ஆச்சரியமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி மிஸ் சூப்பர் குளோப் வேர்ல்ட்’ பட்டம் பெற்ற நடிகை அக்சரா ரெட்டி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இவர் ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் விஜய் டிவியில் கடந்த 2018ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘வில்லா டு வில்லேஜ்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மிஸ் சூப்பர் குளோப் பட்டம் வென்ற அக்சரா ரெட்டி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், அவர் எந்த அளவுக்கு தாக்குப்பிடிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கனி மற்றும் சுனிதா, ஷகிலாவின் மகள் மிளா, யாஷிகாவின் நண்பர் நிரூபன், விஜய் டிவி தொகுப்பாளினிகள் ஜாக்லின் மற்றும் பிரியங்கா, திருநங்கை நமீதா, தொழிலதிபர் ரேணுகா ப்ரவின், மலேசியாவை சேர்ந்த நதியாசிங் உள்பட ஒரு சிலர் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.