பிரபஞ்ச அழகி பட்டம் கிடைக்க காரணமான கேள்வி எது தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவை சேர்ந்த 20 வயது மருத்துவ கல்லூரி மாணவி மனுஷி சில்லார் சமீபத்தில் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். 17 ஆண்டுகளுக்கு பின்னர் உலக அழகி பட்டம் இந்திய அழகி ஒருவருக்கு கிடைத்ததால் பாரத நாட்டிற்கே பெருமை ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று பிரபஞ்ச அழகி போட்டியின் இறுதிச்சுற்று அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்றது. மொத்தம் 92 நாட்டு அழகிகள் பிரபஞ்ச அழகிக்காக போட்டியிட்ட போதிலும் இறுதிச்சுற்றுக்கு கொலம்பியா நாட்டின் லாரா ((Laura Gonzalez)), ஜமைக்கா நாட்டின் டேவினா ((Davina Bennett)) மற்றும் தென்ஆப்பிரிக்கா நாட்டொன் டெமி லீ ((Demi-Leigh Nel-Peters)) ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவின் டெமி லீ இறுதிச்சுற்றில் வென்று பிரபஞ்ச அழகியாக அறிவிக்கப்பட்டார். 22 வயதாகும் டெமி லீ வணிக மேலாண்மையில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் முக்கிய பிரச்சனை என்ன என்பது குறித்த கேள்விக்கு, 75% அலுவலகத்தில் ஆண்கள் செய்யும் வேலையை பெண்கள் செய்தாலும் அவர்களுக்கு ஊதியம் குறைவாக வழங்கப்படுகிறது, இதுவே பெண்களுக்கு ஏற்படும் முக்கிய பிரச்சனை என்று கூறி நடுவர்களை அசர வைத்தார் டெமி லீ. இந்த பதிலால் அவருக்கு பிரபஞ்ச அழகி பட்டம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout