அம்மா ஆகுறதுக்கு கர்ப்பமானா போதாதா? கல்யாணம் எதுக்கு? 'மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் 'பொலிஷெட்டி' டிரைலர்..!
- IndiaGlitz, [Tuesday,August 22 2023]
அனுஷ்கா நடிப்பில் உருவான மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் ’பொலிஷெட்டி’ என்ற திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
திருமணம், ரிலேஷன்ஷிப், உறவு ஆகியவற்றில் நம்பிக்கை இல்லாமல் இருக்கும் அனுஷ்கா ஷெட்டி தனக்கு அம்மாவாக வேண்டும் என்ற ஆசை மட்டும் உள்ளது. அம்மா ஆவதற்கு திருமணம் தேவையில்லை, கர்ப்பமானால் மட்டும் போதும் என்று முடிவு செய்யும் அவர் அதற்காக ஒரு ஆண்மகனை தேடுகிறார்.
ஸ்டாண்ட் அப் காமெடியன் ஆக இருக்கும் ஹீரோவுடன் அவர் பழகும் நிலையில் அவரது குழந்தை ஆசையை அவரை வைத்து பூர்த்தி செய்து கொண்டாரா என்பது தான் இந்த படத்தின் கதை என்பது ட்ரைலரில் இருந்து தெரிகிறது.
சமையல் கலை வல்லுனராக அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள நிலையில் ஸ்டாண்ட் அப் காமெடியன் கேரக்டரில் நவீன் பொலிஷெட்டி நடித்துள்ளார். யூவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ராதான் இசையில், நீரவ் ஷா ஒளிப்பதிவில், மகேஷ்பாபு இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியாகும் அனுஷ்கா படம் என்பதால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.