பெரியார் சிலை விவகாரம் எதிரொலி: சென்னையில் 15 பேர்களின் பூணூல் அறுப்பு

  • IndiaGlitz, [Wednesday,March 07 2018]

பெரியார் சிலை குறித்து எச்.ராஜா சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்ததும், அந்த கருத்து தன்னுடைய அட்மின் தனக்கு தெரியாமல் பதிவு செய்த கருத்து என்று கூறி அவர் வருத்தம் கேட்டதும் தெரிந்ததே. இருப்பினும் இந்த பிரச்சனை முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டே உள்ளது. சிலை உடைக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு சற்றுமுன் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை மயிலாப்பூர் மற்றும் திருவல்லிக்கேணி பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் அப்பகுதியில் உள்ள 15 பேர்களின் பூணூல்களை அறுத்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் அவர்கள் பூணூலை அறுத்துவிட்டு பெரியார் வாழ்க என்ற கோஷத்தையும் எழுப்பியுள்ளனர்

பெரியாரின் சிலை உடைக்கப்படும் என்று கூறியதும், ஒருசில இடங்களில் பெரியாரின் சிலைகள் சேதப்படுத்தியதும் எந்த அளவுக்கு ஒரு அநாகரீக செயலோ,அதைவிட மோசமான அநாகரீக செயல் பூணூல் அறுக்கும் செயல் என்றும், இதை பெரியார் உயிருடன் இருந்தால் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றும் சமூகநல ஆர்வலர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

More News

ரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதியும் அதனையடுத்து ஒருசில வாரங்களில் அவர் நடித்த இன்னொரு திரைப்படமான '2.0' திரைப்படமும் வெளியாகவுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டு புதிய அவதாரங்கள்

ரஜினிகாந்த் கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து டுவிட்டரில் உள்ளார். அவர் இருக்கும் ஒரே சமூக வலைத்தளம் இதுமட்டுமே என்பதும், இந்த பக்கத்தில் 4.58 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதேவி மறைவுக்குக் பின் ஜான்வி கொண்டாடிய நெகிழ்ச்சியான பிறந்த நாள்

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மறைவு மற்றவர்களுக்கு வேண்டுமானால் ஒரு செய்தியாக இருக்கலாம், ஆனால் அவருடைய குடும்பத்தினர்களுக்கு ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு.ghter J

ராணுவம் வந்தாலும் பெரியாரை அகற்ற முடியாது: சத்யராஜ் ஆவேசம்

பெரியார் சிலை உடைப்பு குறித்து பாஜகவின் எச்.ராஜா நேற்று கூறிய கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு தலைவர்கள், திரையுலகை சேர்ந்தவர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பெரியார் சிலை விவகாரம்: முழு பூசணிக்காயை மறைக்கும் எச்.ராஜா

நேற்று காலை பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூலில் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை போல் தமிழகத்திலும் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார்.