ஜெயம் ரவியின் 'மிருதன்'. ஒரு முன்னோட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2015ஆம் ஆண்டு நான்கு ஹிட் படங்களை கொடுத்த ஜெயம் ரவி இவ்வருடம் கொடுக்கும் முதல் ஹிட் படம் என எதிர்பார்க்கப்படும் 'மிருதன்' நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. ஜெயம் ரவியுடன் முதன்முதலாக லட்சுமிமேனன் ஜோடி சேரும் இந்த படத்தை இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே 'நாய்கள் ஜாக்கிரதை' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழில் உருவாகியுள்ள முதல் ஜோம்பி திரைப்படமான இந்த படத்தில் ஜோம்பிகள் அனைவருக்கும் மேக்கப் போடுவதே ஒரு பெரிய சவாலான பணி என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் ஹாலிவுட் மேக்கப்மேன்களை பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க உள்ளூர் மேக்கப்மேன்களை வைத்தே இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
500 துணை நடிகர்களுடன் 1500 கிராபிக்ஸ் காட்சிகளுடன் எடுக்கப்பட்ட இந்த படத்தின் கிளைமாக்ஸ் மிகவும் பிரமாண்டமாக அமைந்துள்ளதாகவும், ஹாலிவுட் தரத்தில் அமைந்துள்ள இந்த கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவரும் என்றும் கூறப்படுகிறது.
ரொமான்ஸ் காட்சிகள் மிகவும் குறைவாக அதே நேரத்தில் தேவைக்கேற்ப வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆக்சன் காட்சிகள் படத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளதாகவும் கூறப்படும் படம் மிருதன்
மேலும் 'மிருதன்' என்ற தலைப்பு பாதி மிருகம், பாதி மனிதனை குறிப்பதாகவும், மிருகம் என்ற வார்த்தையின் முதல் இரண்டு எழுத்தான 'மிரு'வும், மனிதன் என்ற வார்த்தையின் கடைசி இரண்டு எழுத்தான் 'தன்' என்ற எழுத்துக்களையும் சேர்த்து இந்த படத்தின் டைட்டிலாக 'மிருதன்' என்று வைத்துள்ளதாகவும், இந்த படத்தின் கேரக்டர்கள் பாதி மிருக குணத்துடனும், பாதி மனித குணத்துடனும் உள்ளவை என்று படக்குழுவினர்களால் விளக்கப்பட்டுள்ளது.
டி.இமான் இசையமைத்துள்ள நான்கு பாடல்களையும் மதன் கார்க்கி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்திற்கு பின்னணி இசையமைத்தது தனக்கு பெரும் சவாலாக இருந்ததாக டி.இமான் சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் விமர்சனத்தை நாளை பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout