துணை முதல்வர் சீட் கொடுத்ததும் திமிர் வந்துருச்சு: 'இடியட்' ஸ்னிக்பிக் வீடியோ 

  • IndiaGlitz, [Thursday,March 24 2022]

துணைமுதல்வர் சீட் கொடுத்ததும் திமிர் வந்துருச்சு என்ற வசனம் இடம் பெற்றிருக்கும் மிர்ச்சி சிவாவின் ‘இடியட்’ திரைப்படத்தின் ஸ்னிக்பிக் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

மிர்ச்சி சிவா நடிப்பில் ராம்பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இடியட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் ஸ்னீக்பீக் வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் மிர்ச்சி சிவா மற்றும் ரெடின்கிங்ஸ்லி ஆகிய இருவரும் கட்சி ஆரம்பிப்பது குறித்து பேசிக் கொண்டே செல்லும்போது பேய் ஒன்று பின்னால் வருகிறது. அதனை பேய் என்று தெரியாமல் கட்சி தொண்டர் என நினைத்து அந்த பேய்க்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதாக மிர்ச்சி சிவா கூறுகிறார். இதனையடுத்து அந்த பேய் சீற, உடனே துணை முதல்வர் பதவி கொடுத்ததும் திமிர் வந்துருச்சு பார்த்தியா என்று மிர்ச்சி சிவா கூறும் காட்சிகளுடன் இந்த வீடியோ முடிவுக்கு வருகிறது.

மிர்ச்சி சிவா ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்திருக்கும் இந்த படத்தில் ஊர்வசி, அக்ஷரா கவுடா, மயில்சாமி, சிங்கமுத்து, உள்பட பலர் நடித்துள்ளனர். விக்ரம் செல்வா இசையில் உருவாகிய இந்த படம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

More News

முதல் நாளிலேயே ரூ.200 கோடி வசூல் செய்யுமா 'ஆர்.ஆர்.ஆர்'?

பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் நாளைய முதல் நாளில் இந்த படம் ரூபாய் 200 கோடி வசூல் செய்ய வாய்ப்பு

முடக்கப்பட்ட கெளதமியின் 6 வங்கிக்கணக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

விவசாய நிலத்தை விற்பனை செய்த வழக்கில் நடிகை கவுதமியின் 6 வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

திரைப்படமாகும் அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு: இயக்குனர் யார் தெரியுமா?

முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு திரைப்படம் எடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மறைந்த ஆனந்த கண்ணன் பிறந்த நாளில் மனைவியின் நெகிழ்ச்சியான பதிவு!

சன் டிவியில் ஆங்கராக இருந்த ஆனந்த கண்ணன் சமீபத்தில் புற்றுநோயால் மறைந்த நிலையில் அவருடைய பிறந்த நாளில் அவருடைய மனைவி நெகிழ்ச்சியான பதிவு செய்துவிள்ளது இணையதளங்களில் வைரலாகி வருகிறது .

சிஎஸ்கே கேப்டன் பதவி: தோனி எடுத்த அதிரடி முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வரும் தோனி, இந்த ஆண்டும் அணியில் இடம் பெற்றதை அடுத்து அவர் தான் கேப்டனாக செயல்படுவார்