காமன்வெல்த் போட்டியில் முதல் தங்கம்: இந்திய வீராங்கனைக்கு குவியும் பாராட்டு

  • IndiaGlitz, [Thursday,April 05 2018]

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் முதல் பதக்கத்தை 56 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் குருராஜா வெள்ளிப் பதக்கம் வென்றார் என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் முதல் தங்கப்பதக்கத்தை மகளிர் 48 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் பிரிவில் மீராபாய் சானு என்பவர் பெற்றுள்ளார். காமன்வெல்த் போட்டிகளில் மீராபாய் சானு பெறும் 6வது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் வென்ற தங்கமங்கை மீராபாய் சானுவுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக டுவிட்டரில் #MirabaiChanu என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.