படுக்கையறை ரகசியங்களை பொது இடத்தில் தெரிவித்த பிரபல நடிகரின் மனைவி

  • IndiaGlitz, [Thursday,March 22 2018]

சமீபத்தில் வெளியாகி சக்கைபோடு போட்ட 'பத்மாவத்' திரைப்படத்தில் நடித்த சாஹித் கபூர் தனது மனைவி மீராவுடன் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கல்ந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பல கேள்விகளுக்கு தம்பதிகள் இருவரும் மாறி மாறி பதிலளித்து கொண்டு வந்த நிலையில் மீராவுக்கு பிடித்த செக்ஸ் பொசிஷன் குறித்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

இந்த கேள்வியால் மீரா தர்மசங்கடத்தில் நெளிவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கூலாக, 'படுக்கையில் எனது கணவரின் ஆதிக்கம் தான் அதிகம் இருக்கும்' என்று சிரித்து கொண்டே பதில் கூறினார். இந்த பதில் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினாலும் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சாஹித் கபூரை வெட்கத்தால் நெளிய வைத்தது

கணவருடன் சேர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மீராவுக்கு இந்த நிகழ்ச்சி வித்தியாசமானதாகவும் மறக்க முடியாத நிகழ்ச்சியாகவும் இந்த ஒரு கேள்வி மாற்றிவிட்டதாக கூறப்படுகிறது.