மருத்துவமனையின் அறிக்கையால் மகிழ்ச்சி அடைந்த விஜயகாந்த் தொண்டர்கள்!

  • IndiaGlitz, [Friday,October 09 2020]

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரும் சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதன்பின் ஓரிரு நாட்கள் மட்டும் சிகிச்சை பெற்றுக் கொண்ட அவர்கள் முழுமையாக குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென மீண்டும் விஜயகாந்த் மட்டும் உடல்நலக்குறைவால் அதே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தற்போது மீண்டும் டிஸ்சார்ஜ் என மருத்துவ நிலை அறிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: விஜயகாந்த் அவர்கள் மருத்துவ குழுவினர் கண்காணிப்பின் மூலம் அனைத்து கதிரியக்க பரிசோதனைகளிலும் அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்ததை அடுத்து இன்று அவர் சென்னை மியாட் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவமனையின் இந்த அறிவிப்பால் விஜயகாந்தின் தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.