விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் உடல்நிலை: மருத்துவமனை அறிக்கை

  • IndiaGlitz, [Tuesday,September 29 2020]

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவருடைய மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரும் சமீபத்தில் கொரனோ தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தேமுதிக பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் செப்டம்பர் 28ஆம் தேதி கோவிட் பரிசோதனைக்கு உட்பட்டு, நோய்த்தொற்று உறுதியாகி, சென்னை மியாட் மருத்துவமனையில் செப்டம்பர் 29ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை சீராக உள்ளது.

மருத்துவ குழுவின் கண்காணிப்பில் உள்ள திருமதி பிரேமலதா விஜயகாந்தின் முதல்நிலை பரிசோதனைக்குப் பின் தேமுதிக தலைவர் மற்றும் கழக பொதுச் செயலாளருமான விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அவரின் உடல்நிலை சீராக உள்ளது. நோய் தொற்றுக்கான அறிகுறி இல்லை. தொடர் மருத்துவ சேவையினால் அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து இருக்கிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரது உடல்நிலையும் தேறி வருவதாக வெளிவந்துள்ள தகவல் அக்கட்சியின் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.