கவுதம் மேனன் பட நாயகிக்கு 2வது திருமணம்: மும்பை தொழிலதிபரை மணந்தார்!

  • IndiaGlitz, [Tuesday,February 16 2021]

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய முதல் திரைப்படமான ’மின்னலே’ மிகப் பெரிய ஹிட்டான நிலையில் இந்த படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் அந்த படத்தையும் கவுதம் மேனன் இயக்கினார் என்பதும் குறிப்பிடதக்கது. இந்தியில் தயாரான மின்னலே படத்தின் ரீமேக்கில் தியா மிர்சா என்ற நடிகை நடித்திருந்தார். இவர் ஏற்கனவே தமிழில் வெளியான அரவிந்த்சாமியின் ’என் சுவாச காற்றே’ என்ற படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை தியா மிர்சா, நேற்று மும்பை தொழிலதிபர் வைபவ் ரேகி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தனது திருமணம் குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்த தியா மிர்சாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு சஹில் சங்கா என்பவரை தியா மிர்சா காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் ஆனால் 2019 ஆம் ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்று சட்டப்படி பிரிந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'குக் வித் கோமாளி' கனி பிறந்த நாள்: விஜயலட்சுமி வெளியிட்ட வேடிக்கை புகைப்படம்

தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மூத்த மகளான கனி, 'குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் என்பது தெரிந்ததே

ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்து வருகிறார்- ஓபிஎஸ் புகழாரம்!

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்த நாளையொட்டி கோவையில் நேற்று இலவசத் திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக- முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அதிரடி விளக்கம்!

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன.

தனுஷ் தான் தலைவரா? 'தி க்ரே மேன்' படத்தின் லீக் ஆன தகவல்!

தனுஷ் நடிக்கவிருக்கும் ஹாலிவுட் திரைப்படமான 'தி க்ரே மேன்' என்ற படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில்

பொதுநலனுக்காக போராடினால் தேசத்துரோக வழக்கா? கமல்ஹாசன்

டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக சுற்றுச்சூழல் அக்கறையாளர் திஷா ரவி