சென்சார் அதிகாரிகள் லஞ்சம்.. விஷால் புகாருக்கு அதிரடி நடவடிக்கை எடுத்த மத்திய அரசு..!

  • IndiaGlitz, [Friday,September 29 2023]

நடிகர் விஷால் நேற்று தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவில் தனது ’மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பை சென்சார் செய்வதற்கு லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்தார். ரூ.3 லட்சம் ஒரு அதிகாரிக்கும், ரூ.3.5 லட்சம் இன்னொரு அதிகாரிக்கு வழங்கியதாகவும் அந்த அதிகாரியின் பெயர் மற்றும் வங்கி கணக்கையும் அவர் தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் விஷாலின் வீடியோ வெளியாகி இணையதளத்தில் வைரலான நிலையில் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் இதுகுறித்து எச்சரிக்கையை தனது சமூக வலைத்தளத்தில் விடுத்துள்ளது.

திரைப்பட தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக நடிகர் விஷால் கூறிய புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் தணிக்கை துறை அதிகாரிகள் லஞ்ச புகாருக்கு உள்ளானது துரதிஷ்டவசமானது என்றும் இன்றே மும்பையில் உள்ள அதிகாரிகளை விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மேலும் இதே போன்ற புகார் இருந்தால் உடனடியாக jsfilms.inb@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் பற்றிய தகவலை வழங்குவதன் மூலம், அமைச்சகத்துடன் ஒத்துழைக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது விஷாலுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகிற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

More News

'எங்க ஆளுங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா சும்மா இருக்க மாட்டேன்': த்ரிஷா வெளியிட்ட டீசர்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வரும் தசரா தினத்தில் வெளியாக இருக்கும் திரைப்படத்தின் டீசரை நடிகை த்ரிஷா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வாழ்த்து

அண்டை மாநிலத்திடம் ஏன் நீர் பிச்சை எடுக்க வேண்டும்: சிம்பு பட தயாரிப்பாளர் ஆவேசம்..!

அண்டை மாநிலத்திடம் ஏன் நீர் பிச்சை எடுக்க வேண்டும் என சிம்பு நடித்த 'மாநாடு' உள்பட பல திரைப்படங்களை தயாரித்த சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து மேலும்

கன்னடர்களின் சார்பாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.. பிரபல நடிகர் ட்விட்..!

நேற்று நடிகர் சித்தார்த் கர்நாடகாவில் தனது 'சித்தா' படத்தின் புரமோஷன் பணியில் இருந்தபோது  திடீரென கன்னடர்கள் சிலர் விழா நடந்த இடம் இடத்திற்கு வந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பிரபுதேவாவை சந்தித்த இலங்கை பிரதமர்.. 'முசாசி' படக்குழுவினர்களுக்கு வாழ்த்து..!

இலங்கையின் படப்பிடிப்பிற்காக முகாமிட்டிருக்கும் பிரபுதேவாவின் 'முசாசி' படக் குழுவினரை அந்நாட்டின் பிரதமரான திரு. தினேஷ் குணவர்தன பிரத்யேக அழைப்பு விடுத்து, சந்தித்து பாராட்டும், வாழ்த்தும்

ஷாருக்கானுடன் மோதல் உறுதி.. பிரபாஸின் 'சலார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

ஷாருக்கான் நடித்த 'டங்க்கி' என்ற திரைப்படம் டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்மஸ் விருந்தாக வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதே தேதியில் பிரபாஸ் நடித்துள்ள 'சலார்'  திரைப்படம்