தமிழகத்தில் கொரோனா பாதித்த ஐவர் குறித்த தகவல்: அமைச்சர் விஜயபாஸ்கர் 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 57 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் செய்தியின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் பலர் இன்னும் மீண்டு வரவில்லை. இதில் நேற்று இரவு மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 50 பேர் கண்டறியப்பட்டனர். இவர்களில் 45 பேர் டெல்லி மத மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் என்ற நிலையில் மீதமுள்ள ஐவர் குறித்த தகவலை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள தகவலின்படி சென்னை விமான நிலையத்தில் பணிபுரியும் கன்னியாகுமரியை சேர்ந்த 35 வயது ஆண் ஒருவருக்கும், சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த 61 வயது நபர் ஒருவருக்கும், கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து இவர்கள் மூவரும் சென்னை மற்றும் குமரி அரசு மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த 85 வயது நபர் ஒருவருக்கும், சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள கழிப்பட்டூர் என்ற பகுதியை சேர்ந்த 54 வயது நபருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது