'நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க' பெண் நிருபரின் கேள்விக்கு அமைச்சரின் பதில்

  • IndiaGlitz, [Friday,March 16 2018]

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பெண் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல், 'நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க' என்று அமைச்சர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

காவிரி மேலாண்மை விவகாரம் குறித்து ஆலோசனை செய்ய நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் வெளியே வந்த அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நிருபர்கள் கேள்விகளை கேட்டனர். அதற்கு அமைச்சர் சீனியர் தலைவர்கள் பிரஸ் மீட் வைப்பார்கள், அவர்களிடம் இதுகுறித்து கேள்வி கேளுங்கள் என்றார். ஆனால் ஒரு பெண் நிருபர் மட்டும் விடாது அமைச்சரை விரட்டி கேள்வி கேட்டு கொண்டே இருந்தார். அப்போது அமைச்சர் நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க, கண்ணாடி உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

அமைச்சரின் இந்த  சர்ச்சைக்குரிய பதிலுக்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனங்கள் விடுத்தனர். இதனையடுத்து சில நிமிடங்களுக்கு முன்னர் மீண்டும் அமைச்சர் விஜயபாஸ்கர் பத்திரிகையாளர்களை சந்தித்து தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். அரசியல் குறித்த கேள்விகளை தவிர்க்கவே தான் அவ்வாறு கூறியதாகவும், பத்திரிகையாளர்கள் அனைவரும் தனது சகோதர, சகோதரிகள் மாதிரி என்றும் கூறினார். இதனையடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.

More News

பன்னீர்செல்வத்தின் பட்ஜெட்டை கலாய்த்த கமல்ஹாசன்

அதிமுகவினர் தவிர மற்ற அனைவரும் பட்ஜெட்டை விமர்சனம் செய்து முடித்துவிட்ட நிலையில் கமல்ஹாசனும் தன் பங்குக்கு தனது டுவிட்டரில் பட்ஜெட்டை கலாய்த்துள்ளார்.

விஜய்சேதுபதியின் காதலும் முத்தமும்

மக்கள் செல்வன் என்ற பெயருக்கேற்றவாறே விஜய்சேதுபதி தனது ரசிகர்களான மக்கள் மீது மிகுந்த வைத்துள்ளார் என்பது பல நேரங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

என்னுடன் ரஜினி மோதமாட்டார் என்று நினைக்கிறேன்: அமீர்கான் நம்பிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள '2.0' திரைப்படம் கடந்த ஆண்டே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜனவரி 26 உள்பட பல தேதிகள் அறிவிக்கப்பட்டும்,

குரங்கணி தீ விபத்து: தற்செயலா? சதியா? விசாரணை செய்ய கமிஷன் நியமனம்

தேனி மாவட்டம் குரங்கணி பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தால் டிரெக்கிங் சென்றவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என இன்று வரை 15 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இறந்து கொண்டிருக்கும் இரண்டு விஷயங்கள்: அரசு தீர்வு காண விவேக் வேண்டுகோள்

தமிழகத்தில் விவசாயம் மற்றும் சினிமா ஆகிய இரண்டு இறந்து கொண்டிருப்பதாகவும் இந்த இரண்டையும் அரசு தலையிட்டு காப்பாற்ற வேண்டும் என்றும் நடிகர் விவேக் தனது சமூக வலைத்தளம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்