எஸ்பிபி சிகிச்சைக்கு அரசு உதவ தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் 

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அவரது உடல் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தொலைபேசி மூலம் எஸ்பிபி சரண் மற்றும் தனியார் மருத்துவமனை எம்டி ஆகிய இருவரையும் தொடர்பு கொண்டு எஸ்பி பாலசுப்ரமணியன் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் எஸ்பிபியின் சிகிச்சைக்கு அரசு எந்த வகையிலும் உதவ தயார் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவில் குணமாகி வீடு திரும்ப தான் வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் மகன் எஸ்பிபி சரண் அவர்கள் தனது தந்தையின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை செய்து வருவதாகவும் தயவு செய்து அவருடைய உடல்நிலை குறித்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

More News

ஒருவிரலை தூக்கி காண்பிக்கும் எஸ்பிபியின் புகைப்படம்: பிரபல நடிகர் டுவீட்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்

எழுந்து வா பாலு, உனக்காக காத்திருக்கின்றேன்: இசைஞானியின் உருக்கமான வீடியோ

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

மீண்டு வருவான், காத்திருக்கின்றேன்: எஸ்பிபி குறித்து பிரபல இயக்குனர்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்

இசை ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் விடுத்த உருக்கமான வேண்டுகோள்

பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கேரள விமான விபத்து: மீட்பு பணியில் ஈடுபட்ட 22 பேருக்கு கொரோனா!!! அதிர்ச்சித் தகவல்!!!

ஆகஸ்ட் 7 ஆம் தேதி துபாயில் இருந்து கேரள மாநிலம் கரிப்பூர் விமான நிலையத்திற்கு 184 பயணிகளுடன் வந்த ஏர் இந்திய விமானம் விபத்துக்குள்ளானது.