எஸ்பிபி சிகிச்சைக்கு அரசு உதவ தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அவரது உடல் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தொலைபேசி மூலம் எஸ்பிபி சரண் மற்றும் தனியார் மருத்துவமனை எம்டி ஆகிய இருவரையும் தொடர்பு கொண்டு எஸ்பி பாலசுப்ரமணியன் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் எஸ்பிபியின் சிகிச்சைக்கு அரசு எந்த வகையிலும் உதவ தயார் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவில் குணமாகி வீடு திரும்ப தான் வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் மகன் எஸ்பிபி சரண் அவர்கள் தனது தந்தையின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை செய்து வருவதாகவும் தயவு செய்து அவருடைய உடல்நிலை குறித்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
Spoke to legend Singer #SPBalasubrahmanyam son SPB Charan & MD of MGM Hospital. Enquired about his health condition. Assured support from Govt. Wishing him a speedy recovery #GetwellSoonSPBSir
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) August 14, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com