தவறான தகவல் வெளியிட்ட நடிகர் மீது சட்ட நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகரும் தொலைக்காட்சி பிரமுகருமான வரதராஜன் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த வீடியோவில் தனது நண்பர் ஒருவருக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் இருந்ததாகவும், இதனையடுத்து கொரோனா அறிகுறி என்பதால் மருத்துவமனைக்குச் செல்ல முயற்சித்தபோது எந்த மருத்துவமனையிலும் பெட் இல்லை, இங்கு அழைத்துக்கொண்டு வராதீர்கள் எங்களால் சிகிச்சையளிக்க முடியாது என்று மருத்துவமனை நிர்வாகங்கள் தெரிவித்ததாகவும் கூறினார்.
மேலும் தனது செல்வாக்கை பயன்படுத்தி மருத்துவமனைகளின் எம்டி உள்பட பலரிடம் பேசியும் யாரும் உதவ முன்வரவில்லை என்றும், எனவே சென்னையில் உள்ள எந்த மருத்துவமனைகளிலும் பெட் இல்லாததால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 5,000 படுக்கைகள் உள்ளதாகவும், சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதி இல்லை என்று தவறான தகவல் வெளியிட்ட டிவி நடிகர் வரதராஜன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments