'கந்தனுக்கு அரோகரா': ரஜினிக்கு நன்றி கூறிய தமிழக அமைச்சர்
Send us your feedback to audioarticles@vaarta.com
கந்த சஷ்டி கவசம் குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இன்று காலை திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டரில் ஒரு பதிவு செய்தார்.அதில் அவர் கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்ட கருப்பர் கூட்டத்திர்கு கண்டனமும், கருப்பர் கூட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டும் தெரிவித்திருந்தார்.
ரஜினியின் இந்த பதிவிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதும் ’கந்தனுக்கு அரோகரா’ என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. ரஜினி மிகவும் தாமதமாக கந்த சஷ்டி கவசம் குறித்து குரல் கொடுத்தாலும் அவரது குரல் சமூக வலைதளங்களில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கந்தசஷ்டி விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையை பாராட்டிய ரஜினிகாந்த் அவர்களுக்கு அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான தமிழக அரசு சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் யாராயினும் அரசியல் செய்யாமல் உடனடியாக கடும் நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கு அமைதியை நிலைநாட்டி வருகிறது.
அவ்வகையில் கவசமாக இருந்து காக்க என்று கந்தர் அருள்வேண்டி கோடிக்கணக்கான தமிழர்கள் பாடும் பாடலை நிந்தனை செய்தோர் மீதும் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்க முயன்றோர் மீதும் மாண்புமிகு முதல்வர் எடப்பாடியார் அவர்களின் தலைமையிலான அரசு. உடனடியாக நடவடிக்கை எடுத்தமைக்கு பாராட்டு தெரிவித்து பாகுபாடு இல்லா சமய நல்லிணக்கத்திற்கு குரல் கொடுத்துள்ள திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான தமிழக அரசு சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் யாராயினும் அரசியல் செய்யாமல் உடனடியாக கடும் நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கு அமைதியை நிலைநாட்டி வருகிறது. (1/3) https://t.co/0AfqkE8oYD
— SP Velumani (@SPVelumanicbe) July 22, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments