கமல் ஹாசனின் கனவு பலிக்காது: அமைச்சர் வைகை செல்வன்
- IndiaGlitz, [Monday,March 13 2017]
உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் வேறொரு தலைமைக்காகத்தான் வாக்களித்தார்கள். ஆனால் இப்போது அந்த தலைவர் இல்லை. எனவே தமிழகத்தில் புதியதாக சட்டமன்ற தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு தமிழக அமைச்சர் வைகைச்செல்வன் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது: ''ஜனநாயகம் என்பது என்ன? 5 ஆண்டுகாலம் ஆட்சி செய்ய மக்கள் அனுமதி அளித்துள்ளனர் என்றுதான் அர்த்தம். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., தான் தொடர்ந்து ஆட்சியில் இருந்தார். அவருக்குப் பின்னர் 33 ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டாவது முறை அதிமுக ஆட்சியைப் பிடித்தது. இதற்குக் காரணம் அம்மாதான்.
அவரது மறைவுக்குப் பின்னர் மக்களுக்காக நாங்கள் உழைத்து வருகிறோம். 122 உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஆட்சி 5 ஆண்டுகாலம் ஆட்சியில் இருக்கும். ஏழை, எளிய மக்களின் இயக்கம் இது. நடிகர் கமல் ஹாசன் கனவு பலிக்காது'' என்று கூறியுள்ளார்.
More News
Aishwarya Rajesh joins Vikram's new film
Arun Vijay's 'Kuttram 23'- Tamil Nadu Box Office Performance
Title of Naga Chaitanya-Kalyan Krishna movie
Arya's 'Kadamban' gets a release date
தமிழ் சினிமாவில் ஹீரோவாக அதிக படங்கள் நடித்து கொண்டிருக்கும் நட&