பிப்ரவரி 9ல் வெளியாகும் படக்குழுவிற்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து.. நெகிழ்ச்சி அடைந்த ஹீரோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிப்ரவரி 9ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லால் சலாம்’ மணிகண்டன் நடித்த ’லவ்வர்’ உள்பட ஒரு சில திரைப்படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ’லவ்வர்’ படத்தின் குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நடிகர் மணிகண்டன் நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் மணிகண்டன் என்பதும் அவரது ’குட் நைட்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக ’லவ்வர்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். வித்தியாசமான காதல் கதை அம்சம் கொண்ட இந்த படம் வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் மணிகண்டனுக்கு போன் மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து மணிகண்டன் தனது சமூக வலைத்தளத்தில் கூறிய போது ’லவ்வர்’ படம் பார்த்து அமைச்சர் உதயநிதி அவர்கள் தனக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் அவரது வாழ்த்து மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்த படத்தை விரும்பி ரசித்தார் என்ற செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன் என்றும் என்னைப் போன்ற வளரும் கலைஞர்களுக்கு அவரைப் போன்றவர்கள் பாராட்டு மிகவும் ஊக்குவிப்பதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மணிகண்டனின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
It was such a pleasure to receive your wishes over call @Udhaystalin sir 🙏
— Manikandan Kabali (@Manikabali87) February 4, 2024
I feel so elated to learn that you loved & enjoyed our film #Lover ❤️
For an upcoming artist like me, It feels great to be appreciated for my performance in detail. It gives me more energy to explore…
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com