'லியோ'வை அடுத்து அமைச்சர் உதயநிதி பாராட்டிய திரைப்படம்.. வைரலாகும் பதிவு..!

  • IndiaGlitz, [Saturday,November 18 2023]

தளபதி விஜய் நடித்த ’லியோ’ படத்தை பார்த்து தனது சமூக வலைத்தளத்தில் அமைச்சர் உதயநிதி பாராட்டிய நிலையில் அடுத்ததாக நேற்று வெளியாகியுள்ள ’ஏழு கடல் தாண்டி’ என்ற படத்தை பாராட்டி அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

நேற்று வெளியான ’ஏழு கடல் தாண்டி’ படத்தில் பிரபல கன்னட நடிகர் ரக்சித் ஷெட்டி நாயகனாகவும், ருக்மணி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் கதை 10 வருடங்கள் சிறையில் இருந்து விட்டு வெளியே வரும் நாயகன் தனது காதலியை பார்க்க செல்லும் போது ஏற்படும் திருப்பத்தை மிகவும் எமோஷனலாக இயக்குனர் தந்துள்ளார்.

இந்த படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் உதயநிதி தனது சமூக வலைதள பக்கத்தில் ’ஏழு கடல் தாண்டி திரைப்படம் மிகச்சிறந்த மேக்கிங் என்றும் ரக்சித் ஷெட்டி மற்றும் அவருடைய குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் இந்த படம் ஒரு மேஜிக்கல் படம் என்றும் பெரிய திரையில் இந்த படத்தை காணுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் உதயநிதியின் பதிவு அடுத்து மேலும் வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.