விஜய்யின் அரசியல் கட்சி.. அமைச்சர் உதயநிதி கூறியது என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் இன்று ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நிலையில் அவரது அரசியல் வருகைக்கு பல திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். ஒரு சிலர் அவரது அரசியல் வருகைக்கு விமர்சனம் செய்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் விஜய்யின் அரசியல் வருகை சீமான் மற்றும் உதயநிதிக்கு தான் பாதிப்பு ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இருவருமே அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது அரசியல் நாகரீகமாக கருதப்படுகிறது. ஏற்கனவே சீமான் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்ததை பார்த்தோம்.
இந்த நிலையில் சற்றுமுன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விஜய் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். அவர், ‘நடிகர் விஜய்யின் மக்கள் பணி சிறக்கட்டும், புதிய கட்சியை தொடங்கிய விஜய்க்கு எனது பாராட்டு. இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்க உரிமை உள்ளது’ என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments