'அயலி' பட இயக்குனருக்கு அமைச்சர் உதயநிதி அளித்த மறக்க முடியாத பரிசு..!

  • IndiaGlitz, [Tuesday,February 14 2023]

சமீபத்தில் வெளியான ’அயலி’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மறக்க முடியாத நினைவு பரிசு ஒன்றை வழங்கி உள்ளார்.

ஜி5 ஓடிடி தளத்தில் ஜனவரி 26 ஆம் தேதி ’அயலி’ என்ற திரைப்படம் வெளியானது என்பதும் தமிழ்ச்செல்வி என்னும் இளம் பெண்ணின் வாழ்க்கை மற்றும் அந்த பெண்ணை சுற்றி இருக்கும் சமூகத்தின் பழக்கவழக்கங்கள், மூட நம்பிக்கை ஆகியவற்றை சுற்றி இந்த படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

8 எபிசோடு கொண்ட இந்த தொடரில் கிராமத்தில் இருக்கும் பழக்க வழக்கங்கள், பெண்கள் பருவம் அடைந்தவுடன் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பின்பற்றப்படும் நடைமுறைகளை சுற்றி கதை சுழல்கிறது. இந்த நிலையில் பழங்கால நம்பிக்கைகளை உடைத்து ஒரு இளம் பெண் மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் போராடும் கதை தான் இந்த ’அயலி’ என்பது குறிப்பிடத்தக்கது.

’அயலி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனர் முத்துக்குமாருக்கு பெரியார் சிலை அளித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:

‘அயலி’. ZEE5 தள வெப் சீரிஸ். வயதுக்கு வந்ததை மறைத்து, மருத்துவர் கனவோடு படிக்கும் மாணவியின் கதை. குழந்தை திருமணத்துக்கு எதிரான, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்படம் அனைவரும் பார்க்கவேண்டிய ஒன்று. இப்பட இயக்குநர் முத்துக்குமாருக்கு பெரியார் சிலை அளித்து பாராட்டினேன்.

More News

அடுத்த சிவகார்த்திகேயன் கவின் தான்: 'டாடா' தயாரிப்பாளர்..!

'டாடா' படத்தின் வெற்றி விழாவில் பேசிய தயாரிப்பாளர் அம்பேத்குமார், 'சிவகார்த்திகேயன் போல் கவின் நிச்சயமாக வருவார்' என கூறியுள்ளார். 

இது 15 வருட ஒற்றுமை.. இன்னும் தொடரும்: சினேகாவின் காதலர் தின க்யூட் புகைப்படங்கள்..!

 உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்றான பிரசன்னா மற்றும் சினேகா ஜோடி

இனிமேல் நான் சிங்கிள் இல்லை.. காதலை உறுதி செய்த 'விக்ரம்' பட நடிகர்..!

பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகர் ஜெயரான் மகனும், கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய 'விக்ரம்' உள்பட பல திரைப்படங்களில் நடித்தவருமான காளிதாஸ் ஜெயராமன் சற்றுமுன்

'ஜெய்பீம்' நடிகையா இப்படி? காதலர் தினத்தில் ஒரு அதிர்ச்சி முத்த புகைப்படம்..!

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று காதலர் தினத்தை காதலர்கள் வெகு விமர்சனியாக கொண்டாடி வருகின்றனர். 

'அயலி' படத்தின் அம்மா நடிகையா இவர்?  வைரலாகும் கிளாமர் புகைப்படங்கள்..!

 சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற 'அயலி' படத்தில் அம்மா கேரக்டரில் நடித்த நடிகையின் கிளாமர் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.