'அயலி' பட இயக்குனருக்கு அமைச்சர் உதயநிதி அளித்த மறக்க முடியாத பரிசு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியான ’அயலி’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மறக்க முடியாத நினைவு பரிசு ஒன்றை வழங்கி உள்ளார்.
ஜி5 ஓடிடி தளத்தில் ஜனவரி 26 ஆம் தேதி ’அயலி’ என்ற திரைப்படம் வெளியானது என்பதும் தமிழ்ச்செல்வி என்னும் இளம் பெண்ணின் வாழ்க்கை மற்றும் அந்த பெண்ணை சுற்றி இருக்கும் சமூகத்தின் பழக்கவழக்கங்கள், மூட நம்பிக்கை ஆகியவற்றை சுற்றி இந்த படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
8 எபிசோடு கொண்ட இந்த தொடரில் கிராமத்தில் இருக்கும் பழக்க வழக்கங்கள், பெண்கள் பருவம் அடைந்தவுடன் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பின்பற்றப்படும் நடைமுறைகளை சுற்றி கதை சுழல்கிறது. இந்த நிலையில் பழங்கால நம்பிக்கைகளை உடைத்து ஒரு இளம் பெண் மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் போராடும் கதை தான் இந்த ’அயலி’ என்பது குறிப்பிடத்தக்கது.
’அயலி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனர் முத்துக்குமாருக்கு பெரியார் சிலை அளித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:
‘அயலி’. ZEE5 தள வெப் சீரிஸ். வயதுக்கு வந்ததை மறைத்து, மருத்துவர் கனவோடு படிக்கும் மாணவியின் கதை. குழந்தை திருமணத்துக்கு எதிரான, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்படம் அனைவரும் பார்க்கவேண்டிய ஒன்று. இப்பட இயக்குநர் முத்துக்குமாருக்கு பெரியார் சிலை அளித்து பாராட்டினேன்.
‘அயலி’. ZEE5 தள வெப் சீரிஸ். வயதுக்கு வந்ததை மறைத்து, மருத்துவர் கனவோடு படிக்கும் மாணவியின் கதை. குழந்தை திருமணத்துக்கு எதிரான, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்படம் அனைவரும் பார்க்கவேண்டிய ஒன்று. இப்பட இயக்குநர் முத்துக்குமாருக்கு பெரியார் சிலை அளித்து பாராட்டினேன். pic.twitter.com/mxBCGfXMND
— Udhay (@Udhaystalin) February 13, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com