பண நெருக்கடியால் நின்றுபோன நடிகர் சங்க கட்டிடம்: அமைச்சர் உதயநிதி செய்த உதவி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சங்கத்துக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று கடந்த சில ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் நிலையில் இந்த கட்டிடம் நிதி நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த கட்டிடத்தை கட்டுவதற்காக அமைச்சர் உதயநிதி ஒரு கோடி ரூபாய் உதவி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாசர் தலைமையிலான நடிகர் சங்கம் சென்னையில் புதிய கட்டிடம் ஒன்றை கட்டி வந்த நிலையில் அந்த கட்டிடத்தை முழுமையாக முடிக்க இன்னும் சில கோடிகள் தேவைப்படுகிறது என்று கூறப்பட்டது. இதற்காக சில நடிகர்களிடம் நிதி திரட்டவும் முடிவு செய்திருந்த நிலையில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க கட்டிட பணிக்கு ஒரு கோடி ரூபாய் காசோலையை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கி உள்ளார்.
இந்த காசோலையை நாசர், விஷால், கார்த்தி, மற்றும் பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இது குறித்து நடிகர் விஷால் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
உதயநிதி அவர்கள் எங்கள் தென்னிந்திய நடிகர் சங்கத்தை கட்டி எழுப்பும் முயற்சிகளுக்கு உதவியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அவருடைய உதவியால் இந்த கட்டிடம் மீண்டும் பணிகள் தொடங்க உள்ளன. எனது அன்பு நண்பரும், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆன உதயநிதி அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி. அவரை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்’ என்று தெரிவித்துள்ளார்
Dear Udhaya, I sincerely thank u as a friend, producer, actor and now sports minister of Tamil Nadu govt for your contribution to our South Indian artistes association building efforts and your willingness to finish it as early as possible and also coming forward to help in any… pic.twitter.com/H40q6HAzvo
— Vishal (@VishalKOfficial) February 15, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments