விஜய் நடிக்கிற வேலையை மட்டும் பார்க்கட்டும்: தமிழக அமைச்சர்

  • IndiaGlitz, [Wednesday,October 03 2018]

தமிழ் திரையுலகில் இருந்து அரசியலுக்கு யார் வந்தாலும் தமிழக அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது தெரிந்ததே. இதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என வித்தியாசமே இருப்பதில்லை. குறிப்பாக அரசியலுக்கு வந்துவிட்ட கமல்ஹாசனுக்கும், அரசியலுக்கு வரவிருக்கும் ரஜினிக்கும் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 'சர்கார்' திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பலரது பேச்சில் அரசியல் சாயம் இருந்தது. குறிப்பாக விஜய் பேசியபோது, 'மன்னர் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்றும் 'மேலே இருப்பவர்கள் ஊழல் செய்யாமல் இருந்தால் தானாகவே ஊழல் மறைந்துவிடும்' என்றும் கூறினார். மேலும் 'சர்கார்' திரைப்படத்தில் அரசியலை மெர்சலாக்கியுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

விஜய்யின் அரசியல் கலந்த இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் 'நடிகர் விஜய்யை அரசியலுக்கு மக்கள் அழைத்தார்களா? நடிக்கிற வேலையை மட்டும் அவர் பார்க்கட்டும் என தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் விஜய்யால் அரசியலில் தாக்குப்பிடிக்க முடியாது. என்றும் அவர் கூறியுள்ளார்.

More News

'சர்கார்' விழாவை ஏன் தொகுத்து வழங்கவில்லை: பிரபல தொகுப்பாளினி தகவல்

நேற்று நடைபெற்ற விஜய்யின் 'சர்கார்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை நடிகர் பிரசன்னாவும், தியாவும் தொகுத்து வழங்கினர். இருவருமே இந்த விழாவை நன்றாக தொகுத்து வழங்கினார்கள்.

தமிழக அரசியல்வாதிகளை கலாய்த்த 'நோட்டா' நடிகர்

'அர்ஜூன் ரெட்டி' என்ற ஒரே படத்தின் மூலம் தமிழகம் உள்பட தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் நடித்த 'நோட்டா' திரைப்படம் வரும் 5ஆம் தேதி வெளியாகின்றது.

ஊட்டி அருகே மாயமான 7 பேர் கதி என்ன? மாறுபட்ட தகவல்களால் பரபரப்பு

ஊட்டி அருகே சுற்றுலா சென்ற 7 பேர் திடீரென மாயமானதாக வெளிவந்த தகவல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

3 ஆண்டுகளுக்கு ஆசிரியரை தத்தெடுத்த பிரபல நடிகர்

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் சமூக பிரச்சனைகள் குறித்த கருத்துக்களை பதிவு செய்வது மட்டுமின்றி

விஜய்யும் சிம்புவும் நினைப்பவர்கள் தான் ஆட்சியை பிடிக்க முடியும்: டி.ராஜேந்தர்

நேற்று நடைபெற்ற 'சர்கார்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அரசியல் சாயம் அதிகம் இருந்தது. விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று சிலர் நேரடியாகவும் சிலர் மறைமுகமாவும் கோரிக்கை வைத்தனர்.