தமிழகத்தில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி… முக்கியத் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதில் கோவேக்சின், கோவிஷீல்டு எனும் இரு தடுப்பூசிகள் மட்டுமே பயன்படுத்தப் படுகின்றன. இந்நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியின் முதல் பேட்ச் கடந்த வாரம் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது.
அந்த வகையில் இந்தியா முழுவதும் 18-45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. ஆனால் இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் இந்த முடிவை பல மாநிலங்கள் தள்ளி வைத்துள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 18- 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நாளை முதல் துவங்கும் எனவும் இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைப்பார் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக ரூ.46 கோடி செலுத்தி 9 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதனால் ஆட்டோ டிரைவர்கள், தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டு உள்ளார்.
ஏற்கனவே 18-45 வயதுக்கு உட்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள இணையத்தில் பதிவு செய்யும் முறையை அரசாங்கம் அறிவித்து இருந்தது. அந்த வகையில் ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments