தமன்னா படத்தின் படப்பிடிப்பை திடீரென நிறுத்திய அமைச்சர்.. ரூ.2 கோடி நஷ்டம்.. அதிர்ச்சியில் படக்குழு..
- IndiaGlitz, [Thursday,March 14 2024]
தமன்னா நடித்துக் கொண்டிருந்த படத்தின் படப்பிடிப்பை திடீரென நிறுத்த அமைச்சர் உத்தரவிட்டதை அடுத்து ரூபாய் 2 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளது.
தமன்னா நடித்த வரும் பாலிவுட் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் நடைபெற்று வந்தது. இந்த படப்பிடிப்பிற்கு மாநில சுகாதாரத்துறை மற்றும் காவல் துறையினரிடம் அனுமதி பெற்று தடையில்லா சான்றிதழும் வாங்கி இருந்த நிலையில் திடீரென மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர், மருத்துவமனை தலைமை மருத்துவரை தொடர்பு கொண்டு படப்பிடிப்பை நிறுத்தும்படி உத்தரவிட்டதாக தெரிகிறது.
இதையடுத்து தலைமை மருத்துவர் படக்குழுவினரிடம் படப்பிடிப்பை நிறுத்தும்படி கூறியதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையிடம் அனுமதி பெற்று நடத்திய நிலையில் படப்பிடிப்பை தலைமை மருத்துவர் நிறுத்த சொன்னது தங்களுக்கு அதிர்ச்சியாக இருப்பதாகவும் இந்த மருத்துவமனையில் படப்பிடிப்புக்காக நாங்கள் போட்ட செட் வேஸ்ட் ஆகிவிடும் இதனால் 2 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்றும் எனவே படப்பிடிப்பை நடத்த அனுமதிக்க வேண்டும் என தலைமை மருத்துவரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது
இருப்பினும் அமைச்சர் கூறியதால் படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என்றும் தலைமை மருத்துவர் உறுதியாக இருந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் தமன்னா உட்பட படக்குழுவினர் அனைவரும் திரும்பி சென்றதாகவும் தெரிகிறது.
இது குறித்து படத்தயாரிப்பு நிறுவனத்தின் மேனேஜர் கூறிய போது ’படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் எங்களுக்கு 2 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மீண்டும் அனுமதி வாங்கி படப்பிடிப்பு நடத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மும்பை மருத்துவமனையில் நடந்து கொண்டிருந்த தமன்னா படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது பாலிவுட் திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.