close
Choose your channels

தனுஷின் அடுத்த படத்தில் பியர்ஸ் பிராஸ்னன்?

Saturday, April 7, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷின் அடுத்த படத்தில் பியர்ஸ் பிராஸ்னன்?

தனுஷ் இயக்கத்தில் கார்த்திக் சுப்புராஜ் ஒரு படத்தை இயக்குவதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் ஒருசில ஹாலிவுட் நடிகர்களும் நடிக்கவுள்ளதாக அப்போதே கூறப்பட்டது

இந்த நிலையில் இந்த படத்தில் ஜேம்ஸ்பாண்ட் நடிகர் பியர்ஸ் பிராஸ்னன் அவர்களும் பரிசீலனையில் இருப்பதாக கார்த்திக் சுப்புராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தனது திரைக்கதையை ஒரு ஏஜண்ட் மூலம் பியர்ஸ் பிராஸ்னன் உள்பட ஒருசில ஹாலிவுட் நடிகர்களிடம் கூறியுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பை அமெரிக்கா, லண்டன், மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படமாக்கவும் திட்டமிட்டுள்ளாராம்/

இந்த நிலையில்தான்  ரஜினி படம் இயக்கும் வாய்ப்பு கார்த்திக் சுப்புராஜூக்கு கிடைத்துள்ளதால் ரஜினி படத்திற்கு பின்னரே, தனுஷ் படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.