சினிமாவில் உலக நாயகன்: அரசியலில் நகைச்சுவை நாயகன்; செல்லூர் ராஜூ

  • IndiaGlitz, [Saturday,April 07 2018]

தமிழக அமைச்சர்களில் நெட்டிசன்களால் அதிகம் கலாய்க்கப்பட்டவர் அமைச்சர் செல்லூர் ராஜு தான் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக தெர்மோகோல் குறித்த மீம்ஸ்கள் பல நாட்கள் டுவிட்டரில் டிரெண்ட்டாக இருந்தது

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நடிகர் கமல்ஹாசனும், தமிழக அமைச்சர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டு வருகின்றனர். குறிப்பாக அமைச்சர்கள் ஜெயகுமார், ராஜேந்திரபாலாஜி ஆகியோர் கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்களும் கமல்ஹாசனை இன்று விமர்சனம் செய்துள்ளார். சினிமாவில் உலகநாயகனாக நடித்த கமல்ஹாசன், அரசியலில் நகைச்சுவை நடிகராக நடிக்கிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மேலும் வைகை ஆற்றில் எருமை மாட்டை கழுவினால் கூட கூட்டம் கூடும் என்றும் நடிகர் ஒருவரின் பொதுக்கூட்டத்திற்கு கூட்டம் கூடியதில் வியப்பு ஏதும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More News

தனுஷின் அடுத்த படத்தில் பியர்ஸ் பிராஸ்னன்?

தனுஷ் இயக்கத்தில் கார்த்திக் சுப்புராஜ் ஒரு படத்தை இயக்குவதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் ஒருசில ஹாலிவுட் நடிகர்களும் நடிக்கவுள்ளதாக அப்போதே கூறப்பட்டது

தனுஷ் படத்தில் குஷ்பு அல்லது ரம்யாகிருஷ்ணன்?

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண், ரேவதி நடித்த பா.பாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படம் தற்போது கன்னடத்தில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

சிம்புவுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து சிவகார்த்திகேயன்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்துவிட்ட சிவகார்த்திகேயன் ஒருசில வருடங்களுக்கு முன் தான் சிம்பு படத்தில் பணியாற்றியதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சி எஸ் கே மீது தமிழர்களுக்கு இருக்கும் தீராத காதல்

'ரமணா' திரைப்படத்தில் யூகி சேது ஒரு விஷயத்தை ஆணித்தரமாக பதிவு செய்வார்.

மணிப்பூர் முதல்வரை விட 35 லட்சம் அதிகம் வழங்கிய தமிழக முதல்வர்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை மூன்று தங்கப்பதக்கங்கள் வென்றுள்ளது. மகளிர் 48 கிலோ பளுதூக்கும் போட்டியில்