ஆட்சியை பிடிக்க முடியாது, ஆச்சியை வேண்டுமானால் பிடிக்கலாம்: ரஜினி குறித்து அமைச்சரின் சர்ச்சை பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நினைத்திருந்தால் சமீபத்தில் நடந்த 'காலா' இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் எந்த மேடையில் எதை பேச வேண்டும் என்பதை புரிந்து அவர் அந்த விழாவில் அரசியல் பேசுவதை தவிர்த்தார்.
இந்த நிலையில் ரஜினியை தினந்தோறும் விமர்சனம் செய்து தலைப்பு செய்திகளில் இடம்பெற வேண்டும் என்று பலர் குறிக்கோளுடன் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் ஜெயகுமாரை அடுத்து தற்போது அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் ரஜினி குறித்து பேசிய சர்ச்சைக்குரிய பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, ரஜினி தமிழக ஆட்சியை பிடிக்க முடியாது, காரைக்குடி ஆச்சியை வேண்டுமானால் பிடிக்கலாம்' என்று கூறினார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு காரைக்குடியை சேர்ந்தவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்
ஆச்சி என்பது காரைக்குடி பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் மணமான பெண்களை குறிக்கின்ற மரியாதைக்குரிய சொல் ஆகும். அவர்களை யார் மேண்டுமானாலும் பிடிக்கலாம் என்று அமைச்சர் கூறியுள்ளது நாராசமான வார்த்தைகள் என்றும் இந்த வார்த்தைகளை கேட்கும்போது தங்கள் நெஞ்சம் கொதிப்பபதாகவும் இதற்காக அமைச்சர் செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments