'வருங்கால முதல்வர் விஜய்' போஸ்டர் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ

  • IndiaGlitz, [Friday,June 22 2018]

தளபதி விஜய் பிறந்த நாளை அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் இன்று சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். நேற்று மாலை அவர் நடித்து வரும் 62 வது படமான 'சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கும், நள்ளிரவில் செகண்ட் லுக்கும் வெளியாகி இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் பலர் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறும் போஸ்டர்களில் 'வருங்கால முதல்வர் விஜய்' என்ற வாசகங்களை பதிவு செய்தனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் இதுகுறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு விளக்கத்தையும் கூறியுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் 'வருங்கால முதல்வர் விஜய்' போஸ்டர் குறித்து இன்று அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்களிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அதற்கு பதில் கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூ, 'நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் நாளைய முதலமைச்சர் என விளம்பரப்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், முதல்வராகலாம்' என்று கூறியுள்ளார். அமைச்சரின் இந்த பதில் விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

More News

சூர்யாவின் ஜோடியாக மாறிய ஆர்யா நாயகி

'வனமகள்' படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை சாயிஷா  தற்போது ஆர்யாவுடன் 'கஜினிகாந்த், கார்த்தியுடன் 'கடைகுட்டி சிங்கம்' மற்றும் விஜய்சேதுபதியுடன் 'ஜூங்கா' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

என் பாதையை நான் தான் முடிவு செய்வேன்: கமல்ஹாசன்

கடந்த சில தினங்கள் முன்பு வரை கமல்ஹாசனை பாஜகவின் ஸ்லீப்பர்செல் என்று ஒருசிலர் கூறி வந்தனர். ஆனால் தற்போது கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியையும்,

காமெடித்துறை அமைச்சர் இவர்தான்: ஸ்ரீபிரியா

நடிகர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே அவரை அதிமுக அமைச்சர்கள் ஒவ்வொரு நாளும் விமர்சனம் செய்து கொண்டிருப்பது தெரிந்ததே. அதிலும் குறிப்பாக அமைச்சர் ஜெயகுமார்,

நித்யாவை தனிமைப்படுத்திய பிக்பாஸ் போட்டியாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஐந்து நாட்கள் முடிந்த பின்னரும் இன்னும் சூடுபிடிக்காத நிலையில் தான் உள்ளது. போட்டியாளர்களுக்குள் ஏதாவது சண்டை வந்தால்தான்

திருவள்ளூரில் ஒரு ரியல் 'சாட்டை' சமுத்திரக்கனி: ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

சமுத்திரக்கனி நடித்து இயக்கிய 'சாட்டை' திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை போல் பணிமாறுதல் பெற்ற ஆசிரியர் ஒருவருக்கு மாணவர்களின் எதிர்ப்பு காரணமாக பணிமாற்றம் நிறுத்தி