ரஜினியும் கமலும் காலாவதியானவர்கள்: தமிழக அமைச்சர்

  • IndiaGlitz, [Friday,November 15 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பத்து நிமிடம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தால் அந்த பேட்டி பத்து நாட்களுக்கு ஊடகங்களால் பேசப்படும். செய்திகள், கண்டனங்கள், விவாதங்கள், விமர்சனங்கள் என ரஜினியின் பேட்டி குறைந்தது பத்து நாட்களுக்கு பின்னர்தான் அடங்கும் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் சமீபத்தில் கமல்ஹாசன் அலுவலகத்தில் கே.பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் பேசியபோது அவர் கூறிய காவிச்சாயம், திருவள்ளுவர், வெற்றிடம் போன்ற கருத்துக்கள் இன்னும் டிரெண்டில் உள்ளது அரசியல்வாதிகள் தொடர்ந்து ரஜினியின் பேட்டிக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியபோது, ‘ரஜினியும், கமலும் கலைத்துறையில் 35 ஆண்டுகளாக இருந்து வருவது பாராட்டத்தக்கது. ஆனால் இருவரும் சினிமா துறையில் காலாவதியாகி விட்டனர்.

தமிழக அரசியலின் வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என மு.க.அழகிரி பேசியது குறித்து கருத்து கூறிய அமைச்சர், ‘தமிழக அரசியல் வெற்றிடத்தை ஏற்கனவே முதல்வர் பழனிசாமி நிரப்பிவிட்டார். 2021ம் ஆண்டும் முதல்வராக பழனிசாமிதான் வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்’ என்று தெரிவித்தார்.
 

More News

'விஷால் 28' படத்தின் டைட்டில் அறிவிப்பு

விஷால் தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அதிரடி திரைப்படம் 'ஆக்சன்' இன்று தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது.

சூர்யா, கார்த்தி, ஜோதிகா இணையும் முதல் படம்

நடிகர் கார்த்தியும் நடிகை ஜோதிகாவும் முதல்முறையாக இணைந்து நடிக்கும் படம் ஒன்றை கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' பட இயக்குனர் ஜித்துஜோசப் இயக்கியுள்ளார்

அசாம் மாநிலத்தில் சூப்பர்ஹிட் வெற்றி பெற்ற 'தெறி'

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிப்படம் 'தெறி'. இந்த படத்தின் கதை தனது மகளின் பாதுகாப்பிற்காக முன்னாள் காவல்துறை அதிகாரி

இப்படி ஒரு ஹெல்மெட் தேவையா? தூக்கி போட்டு உடைத்த போலீஸ்!

ஹெல்மெட் என்பது வாகனம் ஓட்டுபவரின் உயிரை காப்பாற்றும் முக்கிய அம்சம் என்பதால் தான் சென்னை ஐகோர்ட், அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் போட வேண்டும்

எங்க திரும்பினாலும் நம்ம நியூஸ்தான்: சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் உற்சாகம்

சிவகார்த்திகேயன் நடித்த 'ஹீரோ' திரைப்படத்திற்கு நீதிமன்றம் சற்றுமுன் இடைக்கால தடை விதித்ததால் இந்த படம் திட்டமிட்டபடி வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளிவருமா?