ரஜினியும் கமலும் காலாவதியானவர்கள்: தமிழக அமைச்சர்
- IndiaGlitz, [Friday,November 15 2019]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பத்து நிமிடம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தால் அந்த பேட்டி பத்து நாட்களுக்கு ஊடகங்களால் பேசப்படும். செய்திகள், கண்டனங்கள், விவாதங்கள், விமர்சனங்கள் என ரஜினியின் பேட்டி குறைந்தது பத்து நாட்களுக்கு பின்னர்தான் அடங்கும் என்பது தெரிந்ததே.
அந்த வகையில் சமீபத்தில் கமல்ஹாசன் அலுவலகத்தில் கே.பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் பேசியபோது அவர் கூறிய காவிச்சாயம், திருவள்ளுவர், வெற்றிடம் போன்ற கருத்துக்கள் இன்னும் டிரெண்டில் உள்ளது அரசியல்வாதிகள் தொடர்ந்து ரஜினியின் பேட்டிக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியபோது, ‘ரஜினியும், கமலும் கலைத்துறையில் 35 ஆண்டுகளாக இருந்து வருவது பாராட்டத்தக்கது. ஆனால் இருவரும் சினிமா துறையில் காலாவதியாகி விட்டனர்.
தமிழக அரசியலின் வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என மு.க.அழகிரி பேசியது குறித்து கருத்து கூறிய அமைச்சர், ‘தமிழக அரசியல் வெற்றிடத்தை ஏற்கனவே முதல்வர் பழனிசாமி நிரப்பிவிட்டார். 2021ம் ஆண்டும் முதல்வராக பழனிசாமிதான் வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்’ என்று தெரிவித்தார்.