என்னை பதவியில் இருந்து நீக்க சொல்ல கமல்ஹாசன் யார்? அமைச்சர் ஆவேசம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசன் சமீபத்தில் 'இந்து தீவிரவாதி' குறித்து பேசியது கடும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிலையில் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று செய்தியாளர்களிடையே நேற்று பேசினார்.
அமைச்சரின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து இன்று அறிக்கை வெளியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இதற்கு சற்றுமுன் பதிலளித்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "நாக்கை அறுக்க வேண்டும் என அமைச்சராக நான் பேசியதில் என்ன தவறு உள்ளது. என்னை பதவி நீக்கச் சொல்ல கமல்ஹாசன் யார்? என்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் முதல்வருக்கு மட்டுமே உண்டு" என்று ஆவேசமாக கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout