சும்மா அதிருதுல்ல... ரஜினி விவகாரம் குறித்து அதிமுக அமைச்சர் பேட்டி!
Send us your feedback to audioarticles@vaarta.com
ரஜினிகாந்த்-பெரியார் பிரச்சனை குறித்து ஒரு சில அதிமுக அமைச்சர்கள் ரஜினியை கண்டித்து விமர்சனம் செய்து வந்த நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மட்டும் ரஜினிக்கு ஆதரவாக நேற்று பேட்டி அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் தற்போது மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியதாவது: ரஜினிகாந்த் பேசிய உடனே நாடே அதிர்கிறது. அவரைப் பற்றி தானே அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். ரஜினிக்கு தற்போது எழுபது வயது ஆகிவிட்டது. 70 வயதிலும் அவர் ஒரு படம் நடித்தால் அந்த படம் ஐநூறு கோடிக்கு விற்பனை ஆகிறது இன்னும் உலகம் முழுவதும் அவரது படம் ஓடிக்கொண்டிருக்கிறது
70 வயதில் இந்தியாவில் எந்த நடிகர் கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கிறார்கள்? அவருக்கு என ஒரு மாஸ் இருக்கிறது, மவுசு இருக்கிறது. அதை யாராலும் மறைக்க முடியாது. அதை எல்லாம் மறைத்து பேசினால் தவறு’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்
அமைச்சரின் இந்த பேட்டி குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
அதிருது ல
— Dr.Ravi (@imravee) January 24, 2020
??????
எப்பவும் எங்க #தலைவர் கெத்து
Thanks a lot #RajendraBalaji sir
A Sane person among a group of Opportunists
Huge Respect
?????? pic.twitter.com/E74LHHDxY9
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments