சும்மா அதிருதுல்ல... ரஜினி விவகாரம் குறித்து அதிமுக அமைச்சர் பேட்டி!

ரஜினிகாந்த்-பெரியார் பிரச்சனை குறித்து ஒரு சில அதிமுக அமைச்சர்கள் ரஜினியை கண்டித்து விமர்சனம் செய்து வந்த நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மட்டும் ரஜினிக்கு ஆதரவாக நேற்று பேட்டி அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

இந்த நிலையில் தற்போது மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி  கூறியதாவது: ரஜினிகாந்த் பேசிய உடனே நாடே அதிர்கிறது. அவரைப் பற்றி தானே அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். ரஜினிக்கு தற்போது எழுபது வயது ஆகிவிட்டது. 70 வயதிலும் அவர் ஒரு படம் நடித்தால் அந்த படம் ஐநூறு கோடிக்கு விற்பனை ஆகிறது இன்னும் உலகம் முழுவதும் அவரது படம் ஓடிக்கொண்டிருக்கிறது

70 வயதில் இந்தியாவில் எந்த நடிகர் கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கிறார்கள்? அவருக்கு என ஒரு மாஸ் இருக்கிறது, மவுசு இருக்கிறது. அதை யாராலும் மறைக்க முடியாது. அதை எல்லாம் மறைத்து பேசினால் தவறு’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்

அமைச்சரின் இந்த பேட்டி குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

More News

ரஜினிகாந்த் வெறும் அம்புதான். அவரை யாரோ இயக்குகிறார்கள். பிரேமலதா விஜயகாந்த்

துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசி பத்து நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டபோதிலும் ஊடகங்களும், அரசியல் தலைவர்களும் இந்த விஷயத்தை விடுவதாக இல்லை

ரஜினி, கமல் படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கும் பிரபல ஹீரோ!

ஒரே நேரத்தில் ஒரு நடிகர் அல்லது நடிகை அஜித்-விஜய் படங்களில் நடிப்பதும், கமல்-ரஜினி படங்களில் நடிப்பதும் தலைப்புச் செய்தியாக இடம் பெறும் என்பது தெரிந்ததே

'தர்பார்' வசனத்தை கூறி சவால்விட்ட கராத்தே தியாகராஜன்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' படத்தில் 'லெப்ட்ல வைச்சுக்கோங்க, ரைட்ல வச்சுக்கோங்க, ஸ்ட்ரெயிட்டா என்கிட்ட வச்சுக்காதே' என ரஜினி பேசும் வசனம் ஒன்று வரும்

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு தமிழில் நடத்த படுமா ? தொடரும் விவாதம்

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தஞ்சை பெரிய கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்தப் பட்டு வருகிறது.

நடிகர் சங்க தேர்தல் ரத்து: விஷால் எடுத்த அதிரடி முடிவு!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடத்தப்பட்டது செல்லாது என்றும் அந்தத் தேர்தலுக்கு பதிலாக புதிய தேர்தல் இன்னும் மூன்று மாதத்திற்குள் நடத்த வேண்டும்