ரஜினி அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்: தமிழக அமைச்சர் பேட்டி
- IndiaGlitz, [Saturday,October 31 2020]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் குதிப்பார் என்றும், உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வருவதில் இருந்து பின்வாங்குவார் என்றும் இருவேறு கருத்துக்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக அவர் அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை என்றும் அவர் தனது உடல்நிலையை கணக்கில் கொண்டு அரசியலுக்கு வரமாட்டார் என்றே பலரும் கூறி வருகின்றனர்
ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் பல அரசியல் கட்சி தலைவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஜினியின் அரசியல் நிலைமை குறித்து தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் தனது கருத்தை கூறியுள்ளார். ரஜினியின் எந்த நிலைப்பாட்டையும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்றும், ரஜினியும் எண்ணம் நல்ல எண்ணம் என்றும், அவர் அரசியலுக்கு வந்தாலும் ஏற்றுக் கொள்வோம், வராவிட்டாலும் ஏற்றுக் கொள்வோம் என்றும் கூறியுள்ளார். 40 ஆண்டுகளாக தமிழக மக்களுடன் கலந்து இருப்பவர் ரஜினிகாந்த் என்றும், அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்
அதிமுகவில் உள்ள ஒருசில அமைச்சர்கள் ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்தாலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல பேட்டிகளில் ரஜினி குறித்து பாசிட்டிவான கருத்துக்களையே தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது