ரஜினி, கமல் கட்சிகள் 4 அமாவாசைக்குள் காணாமல் போய்விடும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பின்னர் கோலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் அரசியல் கட்சிகள் ஆரம்பிப்பதிலும் ஏற்கனவே இருக்கும் கட்சிகளை புதுப்பிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். கமல்ஹாசன், ரஜினிகாந்த், சரத்குமார், கார்த்திக், விஷால் என ஒரு பெரிய பட்டாளமே அரசியலை நோக்கி நகர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் ரஜினி, கமல் கட்சிகள் உள்பட எந்த புதிய கட்சிகளும் ஓரிரு அமாவாசைக்குள் காணாமல் போய்விடும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
சிவகாசியில் இன்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 'தற்போது புதிது புதிதாக பல கட்சிகள் உருவாகி வருகின்றன. கமல்ஹாசன், ரஜினிகாந்த் கட்சிகள் எல்லாம் ஒரிரு அமாவாசைக்குள் அல்லது அதிகபட்சம் நான்கு அமாவாசைக்குள் காணாமல் போய்விடும். தமிழகத்தில் ஆளும் கட்சியாக அதிமுகவும், எதிர்க்கட்சியாக திமுகவும் மட்டுமே இருக்கும். தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் வேலை இல்லை' என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments