கமல் கட்சியை வளரவிடுவது தமிழகத்துக்கு ஆபத்து: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

  • IndiaGlitz, [Tuesday,October 16 2018]

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனை தினமும் ஒரு தமிழக அமைச்சர் விமர்சனம் செய்வதும், அவர்களுக்கு கமல்ஹாசன் பதிலடி கொடுப்பதும் கடந்த சில மாதங்களாக வழக்கமாக நிகழ்ந்து வரும் நிகழ்வாக உள்ளது. அந்த வகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:

நடிகர் கமல்ஹாசன் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை. அது வளர்ந்தால் தமிழகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் பெரும் ஆபத்து. எம்.ஜி.ஆர். மக்களோடு இருந்து மாளிகையை பார்த்தவர். ஆனால் கமல் மாளிகையில் இருந்து கொண்டு மக்களை பார்க்கிறார். தமிழகத்தை காக்க வந்த ரட்சகர் போல கமல் நாடகம் ஆடுகிறார். அது தேர்தலுக்கு ஒத்துவராது. கமல் கட்சி கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாது என்றும் கூறினார்.

அதே நேரத்தில் ரஜினிகாந்த் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திரன், 'ரஜினி ஆன்மீகத்தை சார்ந்தவர். நல்ல மனிதர் என்று கூறினார்.

அமைச்சரின் இந்த கருத்து குறித்து கமல்ஹாசன் கூறியபோது, 'கரு கலைக்கப்பட வேண்டும் என அமைச்சர் கூறி உள்ளார். அது பெண்களுக்கு பிடிக்காது. ராஜேந்திர பாலாஜி ஒரு தீய சக்தி என கூறினார்.

 

More News

ஆன்லைனில் பட்டாசு விற்பனை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுவிஸில் சின்மயி அம்மா செய்த அட்டகாசங்கள்: இனியவன் பரபரப்பு பேட்டி

சுவிஸ் நாட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்தான் கவிஞர் வைரமுத்து அவர்கள் பாடகி சின்மயியிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாக சின்மயியும் அவருடைய தாயாரும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை வைத்து வருகின்றனர்.

மீடு விவகாரம்: ராதாரவியின் எச்சரிக்கை

தமிழ் திரையுலகில் மீடூ விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இதுகுறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

'இதுதான் உண்மையான 'மீ டூ': பேங்க் மேனேஜரை புரட்டி எடுத்த பெண்

பெண்கள் தங்களுக்குக் நேர்ந்த பாலியல் தொல்லைகளை மீடூ ஹேஷ்டேக்கில் பதிவு செய்து அந்த பதிவு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி, அதற்கு ஆதரவாக ஒருசிலரும் எதிர்ப்பு தெரிவித்து

அமிதாப் மீதும் 'மீ டூ' குற்றச்சாட்டு: அதிர்ச்சி தகவல்

இதுவரை உலகின் பல நாடுகளில் பவனி வந்த 'மீ டூ' ஹேஷ்டாக் தற்போது இந்தியாவிற்கும் குறிப்பாக தமிழகத்திற்கும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.