கமல்ஹாசன் முதலில் கவுன்சிலர் ஆகட்டும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே பரபரப்பான அரசியல் கருத்துக்களை தனது டுவிட்டரிலும் பேட்டியிலும் கூறி வந்த நிலையில் நேற்று அவர் தனிக்கட்சி ஆரம்பிப்பது உறுதி என்றும் தமிழக மக்களுக்காக முதலமைச்சராக போவதாகவும் தனது விருப்பத்தை தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி ஒன்றில் கூறியபோது, ''பணம் செலவழித்து எடுக்கப்படும் படத்தில் வேண்டுமானால் கமல் முதல்வராக நடிக்கலாம். ஆனால் நிஜத்தில் அவரை முதலில் கவுன்சிலாரகச் சொல்லுங்கள் பார்க்கலாம்' என்று விமர்சனம் செய்துள்ளார்
இதேபோல் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியபோது, 'பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்தார்கள். எல்லாரும் காணமல் போய்விட்டார்கள். கமலால் எந்தத் தாக்கமும் வராது' என்று கூறியுள்ளார்.
கமலால் எந்த தாக்கமும் வராதா? அல்லது ஆட்சி மாற்றம் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments