அட்வைஸ் செய்த பாஜக ஆச்சாரி....! தக்க பதிலடி கொடுத்த அமைச்சர் பி.டி.ஆர்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
டுவிட்டரில் நிதி அமைச்சர் பி.டி.ஆர். அவர்களின் பதிவிற்கு, அட்வைஸ் செய்த பாஜக ஆச்சாரிக்கு, தக்க பதிலடி கொடுத்துள்ளார் பழனிவேல் தியாகராஜன்.
தமிழகத்தின் நிதி அமைச்சராக இருப்பவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், யார் என்ன கேள்வி கேட்டாலும் நெத்தியில் அடித்தாற்போல வெளிப்படையாக பதில் பேசக்கூடியவர். ஊடகங்களில் செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கும், தக்க பதில் கூறுவார்.
இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில் "முன்னாள் RBI கவர்னர், MSE தலைவர் மற்றும் 2020ம் ஆண்டின் தமிழக பொருளாதார சீரமைப்பு உயர்மட்ட குழு முன்னாள் தலைவர் சி.ரங்கராஜன் அவர்கள் பல கருத்துகளை பகிர்ந்துகொண்டதோடு சில கோரிக்கைகளை முன்வைத்தார். எங்கள் குடும்பத்துடன் என் தாத்தா காலம் முதல் கொண்ட நட்பை மகிழ்வுடன் நினைவுகூர்ந்தார்" என பகிர்ந்திருந்தார்.
இதற்கு பதில் பதிவிட்ட பா.ஜ.க ஆசீர்வாதம் ஆச்சாரி கூறியிருப்பதாவது,
"ரங்கராஜன் போல் சீனியர் நபர்கள் உங்களை பார்க்க வரும்போது, மரியாதைக்காக சோபாவில் அமர்ந்து பேச சொல்லியிருக்க வேண்டும். உங்களுக்கு எதிரே நாற்காலியில் உட்கார வைத்திருப்பது, நாகரிகமான பழக்கம் இல்லை. பொது அலுவலங்களில் பிறரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளுங்கள்" எனக் கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த பி.டி.ஆர் "பணியாற்றிக்கொண்டிருந்த அலுவலகத்தில் இருந்து யாருக்கும் தெரியாமல் ஓடிப்போனவர். யூதாஸ் நடவடிக்கை, அதாவது பிறரை காட்டி கொடுப்பது மூலம் பாஜகவில் இணைந்த, கார்ப்பரேட் கவர்னென்ஸில் பி.எச்.டி. பட்டம் வாங்கியது போல தன்னை வெளிப்படுத்திக் கொள்பவர் எனக்கு அட்வைஸ் செய்கிறார்" என சிரிக்கும் எமோஜிகளை போட்டுள்ளார் . பிடிஆர்-ன் பதிலடி பதிவிற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
"வர்ரானுங்க.. எதையாவது உளர்ரானுங்க.. பொளீர்..பொளீர்ன்னு அடிவாங்கறானுங்க.. அப்புறம் வலிக்குதே.. வலிக்குதேன்னு கத்திக்கிட்டே ஓடிப் போயி ஒளிஞ்சிக்கறானுங்க" என்றும், @AseerAchary ஆளு யாரு தெரியுமோ.... சசிகலா 2020 ஆகஸ்ட் 14 லேயே... வெளியே வருவாய்ங்க.... திமுக சட்டசபை தேர்தல்ல தோற்கும்னுலாம் ஆருடம் சொன்ன ஆச்சாரி... sorry ஆசாமி... என்றும், அரசு அலுவலகத்தில் BJP உளவாளியாக இருந்து விட்டு அவசரமாக அப்ரூவராக சாட்சி சொல்றேன் தண்டனை நிச்சயம்னு ஓடிய கோமாளி தான் என்றும் , மதுரைகாரர் அல்லவா அடி ஒன்னும் இடி மாதிரி தான் இருக்கும்... என்றும் இணையவாசிகள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
When such a senior person comes to meet you, courtesy demands that you make him sit on a sofa. He might have come for some public obligation but seating him across your working table is not a good manners. Please learn etiquette of public office. https://t.co/dXZNGWynRr
— Dr. Aseervatham Achary / முனைவர். ஆசீர் ஆச்சாரி (@AseerAchary) July 2, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments