'ஆர்.ஆர்.ஆர்' வசூலை இந்திய பொருளாதாரத்துடன் ஒப்பிட்ட மத்திய அமைச்சர்!

பிரமாண்ட இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தின் வசூலை இந்திய பொருளாதாரத்துடன் ஒப்பிட்டு மத்திய அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் தேஜா ஆகியோர் நடித்த ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் 10 நாட்களில் 800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் வசூல் பல சாதனைகளை முறியடித்து வரும் நிலையில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் பேசியபோது இந்திய பொருளாதாரத்தை ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் வசூலுடன் ஒப்பிட்டு பேசினார்.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக கோவிட் அலைகள் இருந்தபோதிலும் இலக்கை விட 5% அதிகமாக அதாவது 418 மில்லியன் டாலர் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்குமுன் எப்போதும் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் அடைந்தது இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் வசூல் சாதனை செய்து வருவது போல் இந்திய பொருளாதாரமும் சாதனைகளை செய்து வருகிறது என்றும் அவர் கூறினார்.