2 கோடி வசூல்ன்னா 20 கோடின்னு சொல்வாங்க: 'மாஸ்டர்' பட வசூலை கலாய்த்தாரா அமைச்சர்?

  • IndiaGlitz, [Wednesday,January 20 2021]

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய நிலையில் இந்த படம் தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூல் செய்து விட்டதாகவும் உலகம் முழுவதும் 200 கோடி வசூலை நெருங்கி வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் ‘மாஸ்டர்’ பட வசூல் குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் பாண்டியராஜன் தங்களது படம் வெற்றி பெற்றுவிட்டது என்று காட்டுவதற்காக 2 கோடி வசூல் செய்ததை 20 கோடி வசூல் ஆனதாக கணக்கு காட்டுவார்கள் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக திரையுலகில் வசூல் குறித்த விவரங்களை சமூக வலைதளங்களில் பலர் தங்கள் இஷ்டத்துக்கு தெரிவித்து வருவார்கள். உண்மையான வசூல் குறித்த தகவல்கள் தயாரிப்பாளருக்கு மட்டுமே தெரியும் என்ற நிலையில் பலர் தங்கள் கற்பனை குதிரைகளை அவிழ்த்துவிட்டு இஷ்டத்திற்கு ஒரு தொகையை சொல்வார்கள்.

சமூக வலைதள டிராக்கர்கள் என்று கூறிக் கொள்ளும் பலர் இந்த படத்தின் வசூலை தங்கள் இஷ்டத்துக்கு கூறி வரும் நிலையில் ‘மாஸ்டர்’ படத்தின் வசூல் குறித்து அமைச்சரின் கிண்டலான பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

சிவகார்த்திகேயன் உதவியால் நனவான கனவு: மருத்துவ மாணவி நெகிழ்ச்சி!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள பூக்கொல்லை என்ற கிராமத்தைச் சேர்ந்த சஹானா என்ற மாணவி பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தும் குடும்ப வறுமையால் டாக்டருக்கு படிக்க வேண்டும்

கமலுக்கு மெசேஜ் அனுப்பிய பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி!

105 நாட்களாக நடைபெற்று வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனின் டைட்டில் வின்னர் ஆக ஆரி மக்களால் தேர்வு செய்யப்பட்டார் என்பதும் அவருக்கு சம்பளம் மற்றும் பரிசு தொகை சேர்த்து கிட்டத்தட்ட

சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: விடுதலையாக ஒருவாரம் இருக்கும் நிலையில் பரபரப்பு!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த நான்கு ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்தார்

ரூ.2 லட்சத்தில் லம்போஹினியா? அசத்தல் சாதனை புரிந்த கேரள இளைஞர்!

மங்களூருவில் உள்ள ஒரு தனியார் தொழில் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்த 25 வயது இளைஞர் அனாஸ் பேபி.

விற்பனையாகாத லாட்டரி சீட்டுக்கு ரூ.12 கோடி பம்பர் Prize.. துள்ளிக் குதிக்கும் தமிழர்!

தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை இன்றும் கொடிகட்டிப் பறந்து வருகிறது.