விஜய்சேதுபதி கருத்துக்கு அமைச்சர் பாண்டியராஜன் எதிர்ப்பு:

  • IndiaGlitz, [Monday,August 12 2019]

காஷ்மீர் பிரச்சனையை உள்துறை அமைச்சர் அமித்ஷா சரியாக கையாண்டதாக நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிலையில், இதே காஷ்மீர் பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்த விஜய்சேதுபதி, 'ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ள விஜய் சேதுபதி அங்குள்ள தமிழ் வானொலி ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் போது, 'ஜம்மு காஷ்மீர் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அப்போது 'காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும் காஷ்மீர் விவகாரம் குறித்து பெரியார் அன்றே கருத்து கூறியுள்ளதாகவும் அடுத்தவர் வீட்டில் மற்றவர்களை தலையிட முடியாது என்றும், அண்டை வீட்டார் மீது அக்கறை மட்டுமே செலுத்த முடியும் ஆளுமை செலுத்த கூடாது என்றும் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது மனவருத்தம் தருவதாகவும் கூறியுள்ளார்.

விஜய்சேதுபதியின் இந்த கருத்து குறித்து நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பாண்டியராஜன் கூறியபோது, 'விஜய்சேதுபதி போன்ற பிரபலங்கள் இந்த விவகாரத்தில் ஆழ்ந்து யோசித்து பேச வேண்டும் என்றும், ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு தொடர்பான விவகாரத்தில் பின்புலத்தை விசாரித்துக் கொண்டு விஜய்சேதுபதி கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

நேற்று காஷ்மீர் விவகாரம் குறித்து ரஜினிகாந்த் மத்திய அரசுக்கு ஆதரவாகவும் விஜய் சேதுபதி மத்திய அரசுக்கு எதிராகவும் கூறியுள்ள கருத்துக்கள் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் வீட்டில் வனிதாவின் செகண்ட் இன்னிங்ஸ்: மீண்டும் பிரளயமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் இரண்டு வாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய போட்டியாளர் வனிதா. இவர் இருந்த இரண்டு வாரங்களில் கிட்டத்தட்ட அனைவரிடமும் சண்டை போட்டுவிட்டார்.

ரஜினி கூறிய உவமைக்கு அதிர்ச்சி அடைய தேவையில்லை: திருமாவளவன்

துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

'நேர்கொண்ட பார்வை' இக்காலத் தேவை: ஒரு காவல்துறை உயரதிகாரியின் பதிவு

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியான இந்த படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

போனிகபூர் அதிகாரபூர்வமாக அறிவித்த 'நேர் கொண்ட பார்வை' வசூல் விபரம்!

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படம் சென்னையில் கடந்த 3 நாட்களில்

'அசுரன்' படத்தின் அடுத்த அப்டேட்டை அறிவித்த ஜிவி பிரகாஷ்!

தனுஷ் நடித்து வரும் 'அசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் ஒரே நேரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.