எல்.ஐ.சி பங்குகள் விற்பனை, தனிநபர் வருமான வரிச்சலுகை: பட்ஜெட்டில் மேலும் சில முக்கிய அம்சங்கள்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று காலை முதல் 2020ஆம் ஆண்டின் பட்ஜெட் உரையை பாராளுமன்றத்தில் படித்து வரும் நிலையில் சற்றுமுன் அவர் தனிநபர் வருமான வரிச்சலுகை குறித்த அறிவிப்பை அறிவித்துள்ளார்.

இதன்படி ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது என்றும் ரூ.5 லட்சம் - 7.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20% இருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.7.5 லட்சம் - 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20% இருந்து 15% ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.10 லட்சம் - 12.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 30% இருந்து 20% ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.12.5 லட்சம் - 15 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 30% இருந்து 25% ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யில் உள்ள மத்திய அரசின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யப்படும் எனவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தமிழகத்தின் நீண்டநாள் கோரிக்கையான தொல்லியல்துறை அருங்காட்சியகம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாரத் நெட் மூலம் 1 லட்சம் கிராமங்களுக்கு ஆப்டிகல் பைபர் இணையதள வசதி செய்து தரப்படும் என்றும், நாடு முழுவதும் முக்கிய இடங்களில் தகவல் சேகரிப்பு பூங்கா அமைக்கப்படும் என்றும் தகவல் சேகரிப்பு மையங்களை தனியார் அமைக்க வகை செய்யும் கொள்கை உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

More News

TNPSCயா? TNPPSCயா? கமல்ஹாசனின் நச் டுவீட்

டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்ததாக சமீபத்தில் தலைப்புச் செய்திகளில் செய்திகள் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அல்வாவில் தொடங்கி அல்வாவில் முடிந்த பட்ஜெட்: கமல் கருத்து

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று 2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். ஏறக்குறைய மூன்று மணி நேரம் அவர் தாக்கல்

ஒரே நாளில் பி.எஸ்.என்.எல்லில் இருந்து வெளியேறும் 80,000 ஊழியர்கள்..! இந்தியாவிலேயே முதல்முறை.

எம்.டி.என்.எல் நிறுவனத்திலிருந்தும் 14,378 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறுகின்றனர். பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்கள் ரூ.40.000 கோடி கடன் வைத்துள்ளன

இந்தியச் சுற்றுச்சூழல் ஆய்வாளர் பவன் சுகதேவிற்கு நோபால் பரிசான  “டைலர் விருது”

சுற்றுச்சூழல் துறையில் நோபால் பரிசான “டைலர் விருது” இந்தியாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் பவன் சுகதேவ் அவர்களுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.

தனியாருக்கு விற்கப்படும் LIC,IDBI பங்குகள்.. குறையும் தனிநபர் வருமான வரி..! மத்திய பட்ஜெட் 2020.

நாடாளுமன்றத்தில் இன்று தனது இரண்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.