'மாநாடு' படம் எப்போது ரிலீஸ் என்றே எனக்கு தெரியாது: அமைச்சர் மா சுப்பிரமணியன்

  • IndiaGlitz, [Thursday,November 25 2021]

சிம்பு நடித்த ’மாநாடு’ படத்திற்காகவே திரையரங்குகளில் தடுப்பு ஊசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியான நிலையில் ’மாநாடு’ திரைப்படம் ரிலீஸ் எப்போது என்று எனக்கு தெரியாது என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள், ‘மாநாடு படத்தின் தயாரிப்பாளர் எங்கள் திரைப்படம் தியேட்டரில் வருவதற்காகவே புது நிபந்தனை விதித்திருப்பதாக கூறினார். மேலும் வேறு எந்த ஊரிலாவது தடுப்பூசி போட்டால் தான் திரையரங்குகளில் அனுமதிக்கப்படும் என்ற சட்டம் இருக்கிறதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க், நியூஜெர்சி போன்ற நகரங்களில் உள்ள திரையரங்குகளில் 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டவர்கள் மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்பது அந்த தயாரிப்பாளருக்கு தெரியுமா? தெரியாதா? என்று எனக்கு தெரியவில்லை.

மேலும் ஒட்டுமொத்த பொதுமக்களை காக்க வேண்டும் என்பதற்கான அரசு இது. ஒரு திரைப்படத்திற்காகவோ, ஏதோ ஒரு படம் ரிலீஸ் ஆவதற்காகவோ இவ்வாறு நிபந்தனை விதிக்கப்படுவது இல்லை. மாநாடு படம் எப்போது ரிலீஸ் என்றே எங்களுக்கு தெரியாது. எனவே தேவை இல்லாத செய்திகளை வெளியே பரப்ப வேண்டாம் என்று ஒரு சமூக அக்கறையோடு அவர்களையும் நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்’ என்று அமைச்சர் கூறியுள்ளார்.