வாடகைத்தாய் மூலம் குழந்தை? நயன்தாராவிடம் விசாரணையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ஆம் தேதி நடந்த நிலையில் திருமணமான 4 மாதத்தில் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக நேற்று விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் நயன்தாரா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து கேள்வி ஒன்றுக்கு மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் பதில் அளித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியபோது ’விதிமுறைகளை பின்பற்றி வாடகைத் தாய் மூலம் நயன்தாரா குழந்தை பெற்றாரா என்று விளக்கம் கேட்கப்படும் என்று கூறினார்.

மேலும் வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்ற விதி இருப்பதாகவும் 21 வயது முதல் 30 வயதுக்குள் இருப்பவர்கள் மட்டுமே சினைமுட்டை தானம் செய்ய வேண்டும் என்றும் திருமணம் ஆகி இருக்க வேண்டும் என்றும் கணவரது ஒப்புதல் பெறப்பட்டு இருக்க வேண்டும் போன்ற விதிமுறைகல் தற்போது நடைமுறையில் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.