விஜய்சேதுபதி யோசித்து செயல்பட வேண்டும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படம் ’800’ என்ற பெயரில் உருவாகவிருக்கும் நிலையில் முத்தையா முரளிதரன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என்று பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இயக்குனர் இமயம் பாரதிராஜா, சீமான், வைரமுத்து, சீனு ராமசாமி, கவிஞர் தாமரை உள்பட பலர் இது குறித்து அறிக்கைகளையும் டுவிட்டுகளையும் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
'800’ திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிப்பது குறித்து புரிந்து செயல்பட்டால் அவரது எதிர்காலத்துக்கு நல்லது. நடிப்பது தனிப்பட்ட உரிமை என்றாலும் உணர்வை புரிந்து செயல்பட்டால் விஜய்சேதுபதி எதிர்காலத்திற்கு நல்லது. கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பது பற்றி, அவர் யோசித்து பார்க்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
இதுவரை திரையுலகினர் மற்றும் எதிர்க்கட்சியினர் மட்டுமே இந்த படத்துக்கு எதிராக குரல் கொடுத்த நிலையில் தற்போது முதல் முறையாக ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரே கருத்து தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments